ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன?

0
64
Will Tasmac stores be allowed to operate from January 14 to 18? What is the decision of the court?
Will Tasmac stores be allowed to operate from January 14 to 18? What is the decision of the court?

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன?

வரும் நாட்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 18ஆம் தேதி வரை அனைத்து ஆலயங்களிலும் வழி தடை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த இரவு ஊரடங்கு ஆனது இம்மாதம் 30ஆம் தேதி வரை நீடித்து உள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது தொற்று அதிக அளவு பரவி வருவதால் தான் தமிழக அரசு ஊரடங்கு அமல் படுத்தி வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளதால் அதிகளவு தொற்று பரவும் அபாயம் ஏற்படும். அதனால் கொரோனா தொற்று குறைந்த பிறகு ஜல்லிக்கட்டு நடத்த கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு அளித்துள்ளார்.

அதாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி பண்டிகை நாட்களில் செயல்பட உள்ள டாஸ்மாக் கடைகளை அனுமதி ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 14 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விழா காலங்களில் டாஸ்மாக் செயல்பட்டால் மக்கள் அதிகளவு கூட்டம் கூடுவர். அதனை தடுக்க உயர் நீதிமன்றம் டாஸ்மாக் செயல்படும் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை குறித்து உயர்நீதிமன்றத்தின் முடிவுகளை மக்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.