விஜயதசமி அன்று திறக்கப்படுகிறதா தமிழக கோவில்கள் ?

0
101
Representative purpose only
Representative purpose only

உலகெங்கும் கொரோனா தொற்று நோய் காரணத்தால் மக்கள் வீடுகளில் முடங்கிப் போனார்கள். பிள்ளைகளுக்கு இணைய வழிக் கல்வி, அலுவலக பணிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்வது போன்ற மாற்றத்தினால் கடந்த ஒன்றரை வருடமாக உலகம் நான்கு அறை சுவற்றினுள் முடங்கிப் போனது.

ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்களுக்கும் என்றாகி போனது. வரலாறு காணாத நிகழ்வாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் கொரோனா தொற்றின் மீதான விழிப்புணர்வும், தடுப்பூசியின் பயன்பாடும் அதிகரித்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

உலகம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா முற்றிலுமாக ஒழியவில்லை.

நம் தமிழக முதலமைச்சரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தினார். இதன்படி கோவில்களுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதாவது வார நாட்களான திங்கள் முதல் வியாழன் வரை கோவில்கள் திறக்கப்படும் என்றும் வார இறுதி நாட்களுக்கான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்களுக்கு மக்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பலதரப்பட்ட மக்களும் போராடி வருகின்றனர்.

இந்த ஆண்டு விஜயதசமி பண்டிகை வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை அன்று கோவில்கள் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வழக்குகள் தொடரப்பட்டன. இதனை நேற்று சென்னை உயர்நீதி மன்றம் நேற்று அவசர வழக்காக எடுத்து விசாரித்தது.

அதன்படி அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளவுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என கூறினார். மேலும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏராளமான பண்டிகைகள் வருவதால், கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்று சுற்றறிக்கையில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விஜயதசமி அன்று கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளட்டும் என தீர்ப்பு வழங்கினார்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவத்துறை வல்லுனர்கள், நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது . இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K