அதிமுக ஆட்சி கவிழ்ப்பு! ஸ்டாலின் வியூகம் இதுதான்! விரைவில் ஆட்சி மாற்றம் ?

0
159

நாங்கள் நினைத்தால் ஆட்சி கலைக்கப்படும், அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டு மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு பிஜேபி தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு செய்த சதிகளை முறியடித்து வென்றதைப் போல வேலூரிலும் வெல்வோம். திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள். நீங்கள் முதல்வர் பழனிசாமி அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற உடனே திமுக பல சாதனைகளை செய்துள்ளது. அவற்றில் ஒன்று மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்றும், மேலும் பேசியதாவது, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும், அந்த எண்ணம் உள்ளது. காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K