குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவாரா சீமான்? விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவா?

0
77
will-seaman-be-arrested-under-the-thugs-act-do-you-support-the-vp
will-seaman-be-arrested-under-the-thugs-act-do-you-support-the-vp

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவாரா சீமான்? விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவா?

விடுதலை புலிகள் இயக்கமானது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட வேற்றுமை எதிர்த்து போராடிய ஒரு இயக்கமாகும். இந்த இயக்கமானது 1976 ஆம் ஆண்டு உருவாகியது. இந்த இயக்கம் தமிழருக்காக ஒரு இடத்தை அமைக்க 1976 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து 2009 வரை தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தியது.இந்தப் போராட்டமானது ஈழப் போர் ஆயுதப் படைகள் மூலம் முடிவுக்கு வந்தது.அதனையடுத்து இந்தியா ,மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற 37 நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தனர்.இவ்வாறு விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சீமான் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுத்த முறையிலும் செயல்படும் சீமானை ,குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவில் ,தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவில் சர்குணன் சபேசன் என்பவர் தொடர்பு கொண்டதால் தேசிய புலனாய்வு அமைப்பினர் அவரை கைது செய்தனர்.சர்குணன் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.அந்த வகையில் பார்க்கும் பொழுது சீமான் மறைமுகமாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி சீமான் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக உள்ளார் என்பது  குறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். ஆனால் காவல்துறை இதுவரை எதையும் கண்டுகொள்ளாமல்  இருக்கிறது.அதுமட்டுமின்றி இதுவரையில் எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை இழிவுபடுத்தி சீமான் பேசியதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தில் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் சீமான் தற்போது பேசுவதாக கூறியுள்ளார்.