நன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ?

0
70

நன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ?

இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இப்போது தனது இடத்தையாவது தக்க வைத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனியின் ஓய்வுகாலம் நெருங்கிய வேளையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி ஐபிஎல் கண்டுபிடிப்பான ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது. அவரும் முதலில் சிறப்பாக விளையாண்டாலும் அதன் பின் வரிசையாக சொதப்ப ஆரம்பித்தார்.

அதனால் முதலில் டெஸ்ட்டில் இருந்து அவர் தூக்கப்பட்டார். அதன் பிறகு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தலையில் அடிபட்டதால் தொடரில் இருந்து விலகினார். அதனால் பகுதிநேரக் கீப்பரான ராகுல் அந்த பொறுப்பை ஏற்றார். இரு போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்து கீப்பிங்கும் செய்தார். இதனால் அவரேக் கீப்பாராக தொடர்வார் என பேச்சுகள் எழுந்துள்ளன.

இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட் இதுபோல சில காலம் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுக்கொண்டது நினைவிருக்கலாம். ஆனால் பண்ட் ஒரு சிறந்த அதிரடி ஆட்டக்காரர் என்பதும் பின்வரிசை ஆட்டக்காரரும் என்பதும் அவருக்கான அடையாளங்களாக உள்ளது. வெறும் 21 வயதே ஆகும் அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுபற்றி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பியபோது ‘அணித் தேர்வு என்பது கேப்டனும் தேர்வுக்குழு தலைவர்களும் முடிவு செய்ய வேண்டியது. அதனால் பண்ட் விளையாடுவதும் விளையாடாமல் போவதும் விராட் கோலி எடுக்கும் முடிவு’ என சொல்லியுள்ளார்.

எப்படி இருந்தாலும் அணியில் பண்ட்டின் இடம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. ஆகவே தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டி தனது இடத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இல்லையெனில் அவர் இடத்தைக் கொத்திச் செல்ல நிறைய பேர் வரிசையில் நிற்கிறார்கள்.

author avatar
Parthipan K