தலிபான்கள் மீது பொருளாதாரத் தடையை விதிக்குமா பாகிஸ்தான்?

0
60
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிவிப்பு “கவனமாக பரிசீலிக்கப்பட்டு முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டது”. அனைத்து நாடுகளும் ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானங்கள் 2255, 1988, 1267 மற்றும் 2253 ஆகியவற்றுடன் இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, மேலும் ஆப்கானிஸ்தான் “பாகிஸ்தானின் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.  மேற்கூறிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் சர்வதேச பொறுப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள், ஆயுதத் தடை மற்றும் தலிபானுடன் இணைந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான நிதி முடக்கம் உள்ளிட்ட ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தடைகளை அமல்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களுடன் “சீக்கிரம் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும்,  நீடித்த மற்றும் கண்ணியமான அமைதிக்கு முழு அர்ப்பணிப்பையும் ஏற்படுத்த வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்து உள்ளது.
author avatar
Parthipan K