துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்!

0
117

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பரபரப்பாக ஒரு தகவல் துணிவு திரைப்படம் பற்றி பரவி வருகிறது. அது என்னவென்றால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் துணிவு படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்பட்டது. கடைசியாக அஜித் அசல் படத்தின் ப்ரமோஷன்களில் கலந்துகொண்டார். அதன் பின்னர் எந்த படத்துக்கும் அவர் ப்ரமோஷன் செய்யவில்லை.

இப்போது அவர் துணிவு படத்துக்காக ப்ரமோஷன் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அஜித்தின் மேனேஜரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா  “ஒரு நல்ல திரைப்படம் அதனளவில் தானே ப்ரமோஷன் செய்துகொள்ளும் –அஜித்” என்று பகிர்ந்து அந்த தகவல்கள் பொய் என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளார்.

துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. அதே போல ரிலீஸுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வியாழக் கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.