தோல்வி பயத்தில் உளறும் எதிர்க்கட்சித் தலைவர்! அமைச்சர் பாண்டியராஜன் விளாசல்!

0
52

தமிழகத்தின் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் கூட அதிமுக வரப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரக்தியில் பேசியிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் பாண்டியராஜன் சென்னை ஆவடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மீதான திடீரென்ற அன்பாலும் ஜெயலலிதா மீது இருக்கும் எதிர்ப்பு அரசியல் காரணமாக கமலஹாசன் வியூகத்தை வகுத்து வருகின்றார். விஸ்வரூபம் திரைப்படம் வரவில்லை என்றால் இந்திய நாட்டை விட்டு சென்று விடுவேன் என கமல் தெரிவித்தார். ஜெயலலிதாவின் உதவி இன்றி அந்த திரைப்படம் வெளிவந்து இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பதிவு செய்த கமல்ஹாசன், இப்பொழுது எம்ஜிஆர் இருந்திருந்தால் இவ்வாறு நேர்ந்து இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்து இருப்பது அவருடைய பாசாங்கை காட்டுகிறது. இது கமல்ஹாசன் முழு அரசியலுக்கு வந்து விட்டதன் அர்த்தம் தான் என்று தெரிவித்தார்.

தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்திருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் என்ற விஷயம் திரைப்படத்துறையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தத் துறையின் நிலையை திமுக ஆட்சி காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கமல்ஹாசன் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் கூட அதிமுக அமரப் போவது இல்லை என திமுகவின் தலைவர் ஸ்டாலின் விரக்தியாக பேசி இருக்கின்றார். எங்கள் கட்சியும் இந்துத்துவத்தை ஆதரிக்கும் கட்சி தான் என்று பல்டி அடிக்க பார்க்கின்றார் ஸ்டாலின்.

சட்டசபை தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், எப்படியாவது வியூகம் அமைத்து மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்குவதற்கு அந்த கட்சி முயற்சி செய்கிறது. அந்த கட்சியின் போலியான முகத்திரையை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மக்கள் இடையே அதிமுகவிற்கு இருக்கின்ற வரவேற்பைப் பார்த்து ஸ்டாலின் பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போன்று அவர் உளறிக் கொண்டிருக்கிறார், என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.