Connect with us

Breaking News

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்! பொதுமக்கள் அச்சம்

Published

on

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்! பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குன்னூர் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காட்டு யானைகள் குன்னூர் மலைப் பாதையில் முகாமிட்டுள்ளது. குட்டி உட்பட 3 காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள ட்ரூக் என்கிற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு அங்குள்ள வாழைகளை சேதப்படுத்தியது. மேலும் காட்டுயானைகளை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அதன் அடிப்படையில் இரவில் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறுவுறுத்தியுள்ளனர்.

Advertisement