தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
178

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதோ முடிந்து விடும், அதோ முடிந்துவிடும், என்று பொதுமக்கள் அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதாவது டிசம்பர் மாதத்திற்கு பிறகும் கூட அடுத்தடுத்து புதிய புயல் சின்னங்கள் உருவாக இருப்பதால் ஜனவரி மாதம் 24ஆம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதேபோலவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகின்றது. ஆனாலும் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் இன்று காலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலையிலிருந்து மழை பெய்து வருவதாக தெரிகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, குன்னத்தூர், களம்பூர் போன்ற பகுதிகளில் இன்று காலையில் இருந்து விட்டு ,விட்டு மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு போன்ற பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது. திருவாரூர் விளமல் மன்னார்குடி தேவர்கண்டநல்லூர், அடியக்கமங்கலம், புலிக்கரை, அம்மையப்பன், உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு ,மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல், வேளாங்கண்ணி, நாகூர், திருப்பூண்டி, திட்டச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்து மழை பெய்து வருவதாக சொல்லப்படுகிறது.