சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கை

0
70

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதாவுடன் ஏ2 குற்றவாளியாக சசிகலாவிற்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 

ஜெயலலிதா இறந்த நிலையில், சசிகலா தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

 

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிராக உள்ள 10 கிரவுண்டு இடம் சசிகலாவிற்கு சொந்தமானது எனக் கூறப்பட்டு வந்தது.

 

அந்த இடத்தில் தற்போது அவர் புதிய இல்லாம் ஒன்றினை கட்டி வருவதாகவும், அது ஜெயலலிதாவின் இல்லம் போலவே அந்த இடத்தில் கட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில் சசிகலாவின் போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள 65 சொத்துக்களை 300 கோடி மதிப்பிலான அந்த சொத்துக்கள் அனைத்தையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

 

இந்த நடவடிக்கை வருமான வரித்துறையின், பினாமி தடுப்புப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும், சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியேற உள்ளார் என்றும், அவர் சிறையிலிருந்து வந்தவுடன் அந்த வீட்டில் தங்க இருப்பதாகவும், அதுதொடர்பாக வந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K