அமித்ஷாவை கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுகிரதா? “கோபேக்” என்ன ஆனது? பம்புகிறதா திமுக? காரணம் என்ன?

0
74

நேற்று சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். வெங்கையா நாயுடு பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், கவர்னர், நடிகள் ரஜினி காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோடி மற்றும் பிஜேபி ஏதுவாக இருந்தாலும் தமிழகத்தில் வரும்பொழுது கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் எதிர்கட்சிகள் நடத்தும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் goback என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிவிட்டர் பக்கத்தில் டிரேண்டிங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு ஏன் மோடி அவரகள் AIMS மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்தின் அடிப்படையில் மதுரையில் AIMS மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டுவதர்க்கு தமிழகம் வந்த பொழுது கூட gobackmodi என்ற ஹாஸ்டெக் எதிர்க்கட்சிகள் உருவாக்கி டிரெண்ட் செய்தனர். அவர் எதற்கு வந்தார், என்ன நோக்கம் என்றெல்லாம் பார்க்காமல் goback என்ற வாசகத்தை கூறினார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் கருப்பு பலூன்கள் பறக்க விட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இதில் பிரசித்தி பெற்றவர். மோடி தமிழகம் அல்லாமல் தென் நாட்டிற்க்கு எங்கு வந்தாலும் goback என்ற வாசகம் இடம் பெறும்.

இது எல்லாம் தேர்தல் காலங்களில் மிகவும் அதிகமாக காணப்படும். இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மோடி அரசு பொறுப்பேற்றது. பிறகு இந்த goback என்ற வாசகம் பெரிதும் உபயோகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் சமயத்தில் மட்டுமே இந்த goback வாசகம் இடம் பெறுமா? என்ற கேள்வி பலரின் கோணத்தில் உள்ளது.

சரி நாம் விசியதிர்க்கு வருவோம், நேற்று சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பற்றி புத்தகம் வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பங்கு பெற்று புத்தகத்தை வெளியிட்டார். இதில் ரஜினி, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், கவர்னர், போன்றவர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

இதில் பேசிய அமித்ஷா தமிழ் தெரியாததால் நான் மிகவும் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டார். ரஜினி பேசும் போது அமித்ஷா மற்றும் மோடி இருவரும் கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள். என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் பிஜேபி அரசு காஷ்மீர் விவகாரத்தை சாமர்த்தியமாக கையாண்டது என்றார்.

இதற்கு பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தனர். குறிப்பாக திருமாவளவன் ரஜினி பிஜேபியை புகழ்ந்து பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று விமர்சித்தார்.

இப்படி இருக்க எதற்கெடுத்தாலும் பிஜேபியை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் நேற்று பிஜேபி தலைவர் அமித்ஷா வந்த பொழுது யாரும் எதும் கூறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகள் பிஜேபியைக் கண்டு அஞ்சுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக திரு வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு வைகோவை அவர் ஒரு பச்சோந்தி என்று பலர் விமர்சித்தனர். எது எப்படியோ பிஜேபி தலைவர் தமிழகம் வந்தும் எதிர்கட்சிகள் விமர்சிக்காமல் பம்பியது என்றே கூறுகின்றனர் பலர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K