ஏன் இந்த மௌனம் இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில்? திமுகவை விளாசிய பாஜக!

0
68

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்சா தலைவி சீதா, விவேகானந்தா தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா உள்ளிட்டோர் தமிழகம் வந்திருந்தார்கள். அதன்பிறகு உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு எல்லோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

அத்துடன் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து 1 மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயசாந்தி பாரதிய ஜனதாவிற்கு மாணவியின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய எந்தவிதமான அவசியமுமில்லை.

இதுவரையில் திமுக லாவண்யாவின் மரணத்தை பற்றி எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறது, அதேபோன்று இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஊடகமும் விவாதப் பொருளாக எடுத்து உரையாற்றவில்லை என தெரிவித்திருக்கிறார்.

ஆகவே பாரதிய ஜனதா கட்சிக்கு இது தொடர்பாக பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக முதலமைச்சர் எதற்காக லாவண்யாவின் மரணத்திற்கு இன்னும் வாய் திறக்காமலிருக்கிறார்.

அந்த இளம்பெண்ணின் மரணத்திற்கு பதில் என்ன? ஆதாயம் கிடைக்கிறது என்று சொல்லத் தெரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் தற்சமயம் அரசியலில் ஆதாயம் தேடுகிறார். மனதளவில் கொஞ்சம்கூட அனுதாபமில்லை இன்னும் மாறவேயில்லை திமுகவை பற்றிய நன்றாகவே அறிவேன் என்று தெரிவித்திருக்கிறார்.