காஞ்சியா? கோவையா? வெற்றி பெறுவது யார்? TNPL!

0
126

உள்ளூர் கோப்பை உலக கோப்பை கிரிக்கெட் போல நடந்து கொண்டிருக்கிறது. சங்கர் சிமெண்ட் வழங்கும் TNPL 4 சீசன் நடந்து வருகிறது. நேற்றை முன்தினம் கேதர் ஜாதவ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோவை மற்றும் காஞ்சி அணிகள் மோதுகின்றனர்.

இப்போட்டி, திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடை பெறும். திண்டுக்கல் மற்றும் சென்னை சேப்பாக் அணிகள் மோதின முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்னில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
2-வது நாளான நேற்று 2 ஆட்டங்கள் நடந்தது. காரைக்குடி காளை- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ‘சமம்’ ஆனது. இதனால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தியது. இதை தொடர்ந்து நான்காவது போட்டி இன்று நடக்கிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை மற்றும் பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் முதல் வெற்றியை பெற போகும் அணி யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது

கோவை அணியில் கேப்டன் அபினவ்முகுந்த், முகமது ஆசிக், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்களும், காஞ்சி வீரன்ஸ் அணியில் கேப்டன் பாபா அபராஜித் விஷால்வைத்யா, கவுசிக் சீனிவாஸ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் காஞ்சி வீரன்ஸ் இரண்டு முறையும், கோவை கிங்ஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இன்று வெற்றி பெறும் அணி எது என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காஞ்சியா? கோவையா? அபினந்த் முகுந்தனா? பாபா அப்ராஜித்தா?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K