கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லாத நிலையில் இடைத்தேர்தல்! ஒப்புதல் வழங்கப் போவது யார் அதிமுகவிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!

0
138

ஊரக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், சிலர் பதவி விலகியதாலும், அந்த இடங்கள் காலியாக இருக்கின்றன என்று மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை மாதம் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதனடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கின்றன 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கின்ற 2 மாநகராட்சி கவுன்சில் 2 நகராட்சி கவுன்சிலர் பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது. இதனடிப்படையில். நாளை மாலை 5 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் நடைபெறவுள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு காட்சியினடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்கவிருக்கிறது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 இடங்களுக்கு கட்சியினடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கு கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்வதற்கு ஏ மற்றும் பி என்ற 2 படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

இந்த படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட வேண்டும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட பிறகு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்திட்டு வந்தார்கள்.

ஆனால் தற்போது அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி சர்ச்சை காரணமாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பதவியை செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில், இந்த படிவங்களில் யார் கையெழுத்திடுவார்? என்ற புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது.

இந்த படிவங்களை வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான ஜூன் மாதம் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இதனடிப்படையில் அதிமுகவின் வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்தை வெற்று வேட்புமனுக்களை சமர்ப்பிப்பார்களா? அல்லது சமர்ப்பிக்க மாட்டார்களா? அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.