இனிமேல் கொரோனா வைரஸ் தாக்குதல் நோய்க்கு இதுதான் பெயர்:அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்!

0
56

இனிமேல் கொரோனா வைரஸ் தாக்குதல் நோய்க்கு இதுதான் பெயர்:அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சீனாவில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 97 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோயின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கையை (774) இந்த நோய் தாண்டியுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உருவாகும் நோய்க்கு உலக சுகாதார நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக பெயரை அறிவித்துள்ளது. எந்த ஒரு இடத்தையோ, விலங்கையோ, குறிப்பிட்ட சமுதாய மக்களையோ குறிப்பிடாமல் இந்த பெயரை உருவாக்கியுள்ளனர். இந்த நோய்கு கோவிட்-19 அதாவது COVID-19 (coronavirus disease 2019) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K