பலமுறை தெரிவித்தும் காதில் வாங்காத அரசு! டாக்டர் ராமதாஸ் வேதனை!

0
73

இணையதள செயலி மூலமாக கந்து வட்டி வசூல் செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது ரூபாய் 4 ஆயிரம் கடனை திருப்பி செலுத்துவதற்காக இணையதள செயலி கந்துவட்டி நிறுவனம் அவமானப்படுத்திய காரணத்தால், மனமுடைந்த மதுராந்தகத்தை சேர்ந்த விவேக் என்ற இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கின்றது. அவருடைய மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல், அவருடைய தந்தையின் மருத்துவச் செலவிற்காக வாங்கிய கடனை திருப்பி கொடுக்க இயலாத நிலையில், விவேக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கந்துவட்டி நிறுவனம் வசைபாடி இருக்கின்றது அவர் திருடன் என்று நண்பர்களிடம் பொய்யாக தெரிவித்திருக்கின்றது. அதுவே அவருடைய தற்கொலைக்கு காரணமாகிவிட்டது.

இணையதள செயலி கந்துவட்டி நிறுவனங்களின் இதுபோன்ற கொடுமைகளால், பல இளைஞர்கள், பெண்கள் உள்பட தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என முன்னரே நான் வலியுறுத்தி இருக்கிறேன். ஆகவே இனிமேலும் தாமதம் செய்யாமல் கந்துவட்டி செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார் டாக்டர் ராமதாஸ்.