தல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!

0
144

தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு நவீன சினிமா உலகில் ரசிகர்கள் நாகரீகமான வார்த்தை பிரயோகத்தில் கற்கால மனிதர்களை போலவே செயல்பட்டு வருகிறார்கள்.

சென்னை அணிக்காக பல மாநிலம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வணிகத்தின் அடிப்படையில் விளையாடி வருகிறார்கள். சென்னை சூப்பர் அணி அதிக விலை கொடுத்து தோனியை ஏலத்தில் எடுத்ததன் காரணமாக, அவர் கேப்டன் என்ற பொறுப்பிற்கு வந்தார். இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு தல பட்டம் வழங்கினார்கள் ஆனாலும் இதனை நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் தல என்றாலே சினிமா ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நடிகர் அஜித்குமார் தான் இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பித்து அதிலும் சென்னை அணிக்காக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி வெற்றி கோப்பையை வாங்கி கொடுத்ததன் காரணமாக, ரசிகர்கள் அவரை தல தோனி என்று அன்பாக அழைக்க ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு இந்திய நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தல என்றாலே தோனிதான் என்ற நிலை ஏற்பட்டது. ஆரம்பத்திலிருந்தே அஜித் ரசிகர்களை இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் சென்ற வருடம் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாத சென்னை அணி இந்த வருடம் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிலும் டெல்லி அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

கடைசியில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை அணி முதல் அமைச்சர் ஸ்டாலின் முதல் அனைத்து தரப்பினரும் அந்த அணிக்கு பாராட்டு மழை பொழிந்தார்கள்.

இதனை கவனித்த அஜித்குமார் ரசிகர்கள் நடிகர் தனுஷ் உள்ளிட்டோரை சமூக வலைத்தளங்களில் வசை பாட தொடங்கினர் அடுத்தபடியாக அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் தன்னை தல ரசிகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படும் நடிகர் சிம்புவும் தல தோனி என குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.

இந்த சம்பவம் அஜித் ரசிகர்களை மேலும் கோபமடையச் செய்தது பொங்கியெழுந்த அவருடைய ரசிகர்கள் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு உள்ளிட்டோரை வசைபாட தொடங்கினார்கள் நன்றிகெட்ட எலும்பன் தனுஷ், நன்றிகெட்ட நாய் சிம்பு என்று தங்களுடைய வலைதளப் பக்கத்தில் அதாவது டுவிட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங் செய்தார்கள்.

இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட தனுஷ் மற்றும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ஆமை அஜித்குமார் என்று பதிலடி கொடுக்கும் விதத்தில் ட்ரெண்டிங் செய்தார்கள், அஜித் குமார் விஜய் தனுஷ் சிம்பு என்று நடிகர்கள் அனைவரும் தங்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி இருந்தாலும், ரசிகர்களுடைய இந்த செயல் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

நோய்தொற்று முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு சினிமா துறை பழையநிலைக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் சினிமா ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும், கடுமையான எதிர்ப்பு உணர்வு ஏற்பட காரணமாகிவிடும்.

இதன்காரணமாக, பாதிக்கப்படப்போவது ஒட்டுமொத்த திரையுலகமும் தான் இதனால் முன்னணி நடிகர்கள் உடைய ரசிகர்கள் செய்யும் இதைப்போன்ற செயல்களை சம்பந்தப்பட்டவர்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.