லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை!

0
120
who-is-behind-this-admk-leadership
who-is-behind-this-admk-leadership

லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தனது அறிக்கையில்,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளி கொண்டுவருவதாக கூறியது.அதன்படி திமுக ஆட்சி அமர்த்திய உடன் முதலில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் இருந்து திமுக தனது வேட்டையை தொடங்கியது.அவர் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அவ்வாறு சோதனை நடத்தியதில் பல கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.அது அதிமுக-விற்கு பேர் அடியாக இருந்தது.அதனையடுத்து முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது அவர் உள்ளாட்சிக்கு வந்த டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாகவும் மேலும் அது சம்பந்தப்பட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து,முன்னாள் அதிமுக அமைச்சர்களை பழிவாங்குவதை விட்டுவிட்டு மக்களிடம் கூறிய அறிக்கைகளை நிறைவேற்றுங்கள் என கூறினார்.இந்த இரு அமைச்சர்களிடம் சோதனை நடத்தியதிலேயே அதிமுக அதிகளவு ஆட்டம் கண்டுவிட்டது.அதனையடுத்து குடிசைவாரிய குடியிருப்பு தரமற்றாதாக கட்டி தந்துள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு திரும்பியது.

அதற்கு அடுத்ததாக திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,கணக்கில் வராத 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.இதற்கு, முன்னாள் ஆட்சியில் இருந்தவர்களே காரணம் என்றும்,இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து தண்டனை வாங்கி தருவதாகவும் கூறியிருந்தார்.செந்தில் பாலாஜி கூறியதை எதிர்த்து முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி நாங்கள் ஆட்சியில் இருந்த வரை அனைத்து கணக்குகளையும் சரியாக வைத்துள்ளோம்.

எங்கள் மீது சோதனை வேண்டுமாயினும் நடத்திக்கொள்ளுங்கள் என்பது போல கூறினார்.இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் வேளையில் அடுத்தப்படியாக முன்னாள் அதிமுக வணிக மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.2011 முதல் 2021 வரை இவர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்தவகையில் இன்று அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை, சோதனை நடத்தி வருகிறது.சோதனையின் முதல் அறிக்கையில் ரூ.90 கோடி அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இவருக்கு சொந்தமான நட்சத்திர விடுதிகள்,மண்டபங்கள் போன்றவற்றிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.இதனால் அதிமுக தலைமை சற்று பரபரப்பாக காணப்படுகிறது.அதுமட்டுமின்றி இதற்கு பின்னணியில் யாரேனும் உள்ளார்களாக என்பதும் அடுத்தக்கட்ட அறிவிப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.