குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்!

0
52

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்!

குழந்தைகளின் நலனுக்காக சில வகையான உணவுப் பொருட்கள்களை சாப்பிடுவதை தவிர்த்து விடவேண்டும். ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழியாக சென்றடைகின்றன.

நாம் உண்ணும் சில உணவுகள் குழந்தைகளுக்கு சிறந்தது அல்ல. தாய்ப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள் ஒன்பது மாதங்களுக்கு உணவில் அக்கறை எடுத்துக்கொண்டு வரவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் தாய்மார்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டுமென தெரிந்துகொள்ளலாம்.

முதலாவதாக குழந்தையின் தாய்மார்கள் காபியை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை குறைக்கிறது. இதனால் தாய்ப்பால் சுரக்கும் அளவையும் குறைக்கிறது. இதனால் தாய்மார்கள் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிகம் காரம் இருந்தால் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் இதனால் வயிறு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

மிக முக்கியமான ஒன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புதினா மற்றும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொள்ளவே கூடாது இதனால் தாய்மார்களுக்கு பால் சுரக்கும் அளவும் குறைகிறது. உணவில் சிறிதளவு சேர்க்கப்படுவதாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவேளை தாய்ப்பால் சுரக்கும் அளவு குறைவாக காணப்பட்டால் இதை தவிர்த்து விட வேண்டும்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு அலர்ஜி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

பழம் வகைகளில் சிட்ரிக் ஆசிட் அதிகமுள்ள ஆரஞ்சு பழம் மற்றும் எலுமிச்சை பழம் போன்றவைகளை சாப்பிடுவதை கொடுக்க வேண்டும் . இவை எல்லாம் குழந்தைகளுக்கு எரிச்சல் மற்றும் சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் பலாப்பழம் மற்றும் மாம்பழம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு மந்தத்தை ஏற்படுத்தும். தாய்மார்கள் மீன் சாப்பிடுவதால் அதிகளவு பால் சுரக்கும். எனினும் மெர்குரி குறைவாக உள்ள மீனை சாப்பிடுவது நல்லது. மெர்குரி அதிகம் உள்ள மீனை சாப்பிடுவதால் குழந்தையின் வளர்ச்சிக்கு அது தடையாக இருக்கும்.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள் பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோல் பால் பொருட்களில் வெண்ணையை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. முக்கியமாக பச்சை முட்டைகளை சாப்பிடவே கூடாது.

பூண்டு சாப்பிடுவதால் சில தாய்மார்களுக்கு பால் சுரக்கும் இருப்பினும் ஒரு சில குழந்தைகளுக்கு பூண்டு வாசனையை இருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உணவு வேறுபாடு என்பதால் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

நீங்கள் உட்கொள்ளும் உணவால் குழந்தைகளுக்கு அலர்ஜி அரிப்பு ஏற்பட்டால் அத்தகைய உணவை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். இவ்வாறு தாய்மார்கள் செய்வதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வேகமாகவும் வளரும்.

author avatar
Parthipan K