கோயம்பேடு மெட்ரோ ரயில் இணையத்தில் புதிதாக எழுதப்பட்டிருந்த பெயரால் பரபரப்பு! கண்டனம் தெரிவித்த வைகோ!

0
70

சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகமான சென்னை கோயம்பேட்டில் இருக்கின்றது. அந்த பகுதியில் இருக்கின்ற பாலத்திற்கு கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன. திடீரென்று நேற்றைய தினம் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ புதிய பெயரை எழுதி இருக்கிறார்கள். இது தொடர்பாக எந்தவித முன் அறிவிப்பும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிக்கவில்லை. இந்த பெயர் மாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர் இந்த ரயில் நிலையத்திற்கு புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்ற பெயரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துக்கின்றேன். யார் அந்த பாஷ்யம் இந்த ரயில் நிலையத்தை அவர் விலைக்கு வாங்கியிருக்கிறார்? என்று ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார் வைகோ.

அதோடு இந்த மெட்ரோ ரயில் நிலையத்தை தனியார் நிறுவனம் என்று நினைத்து கொண்டார்களா அல்லது அது தனி ஒருவரின் சொத்தா பராமரிப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் பெற்று இருக்கிற அவர் தமிழ்நாட்டுக்கு செய்த தியாகம் என்ன எதற்காக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதற்கு சென்னை மாநகர ரயில் போக்குவரத்து கழகம் விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த பெயர் மாற்றம் தமிழக அரசு இருக்கு தெரியுமா இதற்கு அனுமதி அளித்து இருக்கிறார்களா என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் இந்தியா விடுதலை ஆகி 72 வருடங்களாக விமானங்கள், ரயில் நிலையங்களில் எத்தனையோ நிறுவனங்கள் ஒப்பந்தங்களை வாங்கி வேலைகள் செய்து வருகிறார்கள். இதுவரையில் எந்த நிறுவனத்தின் பெயரையும் எழுதியது கிடையாது. ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகளை பெற்ற அதானி குழுமம் அதானி விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ததை கேரள மாநில அரசு கடுமையாக கண்டித்திருக்கிறது.

உங்களுடைய வீட்டிற்கு வண்ணம் அடிக்க வருகின்ற ஒருவர் உங்கள் வீட்டு சுவரில் தன்னுடைய பெயரை எழுதி கொண்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா அதேபோல்தான் விமான நிலையம், மற்றும் தொடர்வண்டி நிலையங்களை பராமரிக்கின்ற நிறுவனங்கள் அவற்றை சொந்தம் கொண்டாட இயலாது. சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா போன்ற பெயர்ப்பலகைகள் இருந்தன. ஆனால் அதனை அகற்றிய மத்திய மாநில அரசுகள் அதனை மறுபடியும் வைத்திருக்கின்றனவா இந்த கேள்விக்கு மத்திய மாநில அரசுகள் பதில் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை தலைநகர் சென்னைக்கு அதானி பெயரை வைப்பதற்கு திட்டம் போட்டு இருக்கிறார்களா என்றும் தெரிவிக்க வேண்டும். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்சமயம் புதிதாக இணைக்கப்பட்ட இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.