வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

0
100
Whitening heavy rain! Holidays for schools and colleges in this district!
Whitening heavy rain! Holidays for schools and colleges in this district!

வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு மேற்கு  மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என தெரிவித்திருந்தனர்.

புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை ,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.

மேலும் வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகின்றது.மழையின் அளவும் ,காற்றின் அளவும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.கடல் கொந்தளிப்பின் காரணமாக மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடல் பக்கத்தில் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
Parthipan K