SBI vs HDFC vs ICICI vs PNB: எந்த வங்கிகள் குறைந்தகால FD-களுக்கு அதிக வட்டியை தருகிறது ?

0
126

முதலீட்டாளர்கள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான ஒன்று என்று கருதப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியத்திலிருந்து பல கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரந்துகொண்டிருக்கும் நிலையில் ஒரு சில வங்கிகள் அதன் குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்கள் குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறமுடியும்.

முதலீட்டாளர்கள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான ஒன்று என்று கருதப்படுகிறது. இப்போது குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி:

ஹெச்டிஎஃப்சி வங்கியானது 6 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.25% முதல் 5.50% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கு 5.75% முதல் 6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

எஸ்பிஐ வங்கி:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 180 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.25% முதல் 5.50% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கான 5.75% முதல் 6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கி 6 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.25% முதல் 5.50% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கு 5.75% முதல் 6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

பிஎன்பி வங்கி:

பிஎன்பி வங்கி 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.50% முதல் 6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கான 6% முதல் 6.80% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது

கனரா வங்கி:

கனரா வங்கி 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.50% முதல் 6.25% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கு 6% முதல் 6.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

author avatar
Savitha