தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்ட சூசக தகவல்!

0
80

தமிழகத்தில் சற்றேறக்குறைய 2 ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்தனர். இந்த சூழ்நிலையில், சென்ற வருடம் நோய் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக செயல்படத் தொடங்கினர்.

இந்த நிலையில், சென்ற ஆண்டுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் நேரடி முறையில் நடைபெற்றது. ஆகவே தற்போது மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது மாநிலத்தில் மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் 11ம் வகுப்பு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது, போன்ற பணிகள் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவை தவிர்த்து அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல் கட்டமாக ஒருசில மாவட்டங்களில் அமலுக்கு வரவிருக்கிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதற்கான வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் 4ம் வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தேசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.