பாஜகவில் இணைகிறார் சசிகலா? அண்ணாமலையின் சூசக விளக்கம்!

0
95

கடந்த 2017ஆம் வருடம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன் பிறகு சென்ற வருடம் விடுதலையாகி வெளியே வந்தார்,

இதனைத் தொடர்ந்து அவர் அதிமுகவை நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்று மிகப்பெரிய திட்டத்தை வகுக்கவிருப்பதாக சொல்லப்பட்டது.

அதோடு அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஆன்மீக பயணம் என்று சொல்லிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அது வெறும் ஆன்மிக பயணமாக மட்டுமல்லாமல் தொண்டர்களை சந்திக்கும் பயணமாகவும் இருந்தது. அதே போல அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகளையும் அவர் சந்தித்து வந்தார்.

ஆனாலும் அவருடைய இந்த சுற்றுப்பயணம் பெரிதாக எந்தவிதமான பலனையும் அவருக்கு வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அவர் திடீரென்று பாஜகவில் இணைய போவதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பாஜகவில் சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுகவின் சசிகலாவை சேர்த்துவிட்டால் அந்த கட்சி இன்னும் வலுவாக இருக்கும் அதற்கு அவர் வந்தால் வரவேற்க தயாராக இருக்கிறோம். அவர் எங்கள் கட்சிக்கு வந்தால் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

அவரை அதிமுகவில் இணைக்காவிட்டால் பாஜகவில் சேர்ப்பதற்கு உண்டான பணிகளை நாங்கள் செய்வோம் என்று அவர் இந்த பேட்டியின்பொது தெரிவித்தார்.

சசிகலாவின் பெயரை சொல்லாமல் சின்னம்மா என்று என்றும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவிற்கு சசிகலா வந்தால் நிச்சயமாக வரவேற்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. இது தனி ஒரு மனிதன் முடிவெடுக்கக் கூடிய விஷயம் கிடையாது.

இது போன்ற நிகழ்வு நடக்கும் என்றால் அது குறித்து டெல்லியிலிருக்கின்ற தலைமை குழுவின் ஆலோசனையின்படி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சசிகலா இதுவரையில் பாஜகவில் இணைவதற்கு ஒரு சிறிய அளவிலான இசைவை கூட வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா அன்று முதல் இன்று வரையில் அதிமுகவை மீட்டெடுப்போம் என்று மட்டுமே தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.