வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?? உங்க காலண்டர்ல குறிச்சி வெச்சுக்கோங்க!!

0
118
When do you know the first single of the movie Strength ?? Mark your calendar !!
When do you know the first single of the movie Strength ?? Mark your calendar !!

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?? உங்க காலண்டர்ல குறிச்சி வெச்சுக்கோங்க!!

தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார் மற்றும் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் படத்தை பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் முதல்வர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பலரிடமும் இந்த படத்தை பற்றிய அப்டேட்டை கேட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி அஜித் அவர்களின் பிறந்த நாளன்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படும் என படத்தின் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரானா பரவல் தொற்று அதிகரித்து வந்ததன் காரணமாக படத்தின் முதல்பார்வை தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த அஜித் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை ரசிகர்களை ஏமாற்றாமல் கூறியிருந்த படியே வலிமை படத்தின் முதல் போஸ்டர் வெளியானது.

மேலும் இரண்டு வருடங்கள் காத்திருந்ததற்காக எந்த ஒரு குறையும் இல்லாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. மேலும் முதல் பார்வை முதல் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது மேலும் சாதனையும் படைத்தது. இதை தொடர்ந்து வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என வந்த தகவலின் பேரில் அவ்வப்போது சில போஸ்டர்களை வெளியிட்டது. ரிலீஸ் தேதி உடன் கூடிய புதிய போஸ்டர் மட்டும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களும் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழு கூறியுள்ளது இதற்காக ரசிகர்கள் பேராவலுடன் காத்து வருகின்றனர்.

author avatar
CineDesk