திமுகவினரை கதறவிட்ட விஜயசாந்தி! நடந்தது என்ன?

0
96

ஒரு காலகட்டத்தில் ஆந்திர மாநில சினிமாவின் மாஸான கதாநாயகர்களை அலற விட்டுக் கொண்டிருந்தார் ஒரு கதாநாயகி அவர்தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் பல இலக்கணங்களை தெரிந்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது.

கதாநாயகர்களை மட்டுமே துதி பாடிக் கொண்டிருந்த சினிமாவை கதாநாயகிகளை நோக்கி திரும்ப வைத்தது இவர்தான். அதுவும் கண்ணீர் மற்றும் காதலால் இந்த சூப்பர் ஹிட்டை இவர் கொடுக்கவில்லை. அதிரடி கிளப்பி அதன் மூலமாக கிடைத்த வெற்றிகள் தான் இவை என்று சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட விஜயசாந்தி சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி அரசியலில் கால் வைத்து தற்சமயம் தெலுங்கானா பாஜகவின் முக்கிய பெண் முகமாக விளங்கி வருகிறார்.

தமிழ்நாட்டிலும் மதமாற்ற சர்ச்சையில் சிக்கியிருக்கும் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து வந்த உண்மை அறியும் குழுவில் முக்கிய நபராக வந்தவர் கையோடு சசிகலாவையும் சந்தித்து அரசியல் பட்டாசுக்கு பரபரப்பு தீயை வைத்து விட்டு சென்றிருக்கிறார் இந்த தேர்தல் சமயத்தில்.

சசிகலாவை சந்தித்ததில் எந்தவிதமான அரசியலுமில்லை என்று அவர் எத்தனை முறை தெரிவித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தமிழக அரசியல் சற்றே தயங்கி நிற்கிறது. அதோடு அவருடைய இந்த செயல் திமுகவை கடும் கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறதாம்.

அப்படி விஜயசாந்தி என்னதான் சொன்னார் என்று கேட்டால் நான் சசிகலாவை சந்தித்து பேசியதில் அரசியல் எதுவுமில்லை. ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மா, சின்னம்மா, என்ற இருவரும் என்னை அவர்கள் வீட்டுப் பெண்ணைப் போல பார்த்துக் கொண்டார்கள்.

என்னுடைய வீட்டில் திமுகவினர் குண்டு வீசிய போது எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பை ஜெயலலிதா வழங்கியதை என்னால் மறக்கவே இயலாது. அவர் என் நெஞ்சிலிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் விஜயசாந்தி.

அம்மாவின் வீட்டு பெண்ணாகத்தான் சசிகலாவை நான் சந்தித்தேன் இவை தவிர அதில் அரசியல் எதுவும் இல்லவே இல்லை அம்மா என்பவர் மிகப்பெரிய அரசியல் ஆளுமை.

அவர் மிகப்பெரிய தைரியம் கொண்டவர் கூட அவர் இல்லாதது சற்றே கஷ்டமாக இருந்தது. அவருடைய இடம் இன்னமும் வெற்றிடமாக தான் உள்ளது. அவர் உயிருடன் இருந்திருந்தால் அதிமுகவும் நன்றாக இருந்திருக்கும் என்று விளாசி இருக்கிறார் விஜயசாந்தி.