வாட்ஸ் அப் பேங்கிங்கை அறிமுகப்படுத்திய பிரபல வங்கிகள்! எப்படி தொடங்கலாம்?

0
119

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த whatsapp பேங்கிங் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கும் வங்கிகள் தொடர்பாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் பரிவர்த்தனை என்பது அதிக நேரம் எடுக்கும் விஷயமாக இருந்தது. ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்புவது, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவது போன்றவை அதிக நேரம் எடுக்கும் காரியமாக இருந்தது.

ஆனால் மொபைல் பேங்கிங் வந்த பிறகு இவை அனைத்தும் ஒரு நொடியில் முடிந்து விடும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. யூபிஐ பரிவர்த்தனைகளும் தற்போது எல்லோராலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை காட்டுகிறது, நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

இதன் அடுத்த கட்டமாக பிரபல வங்கிகளான பார ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐ சி ஐ சி ஐ, ஆக்சிஸ் வங்கி, மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு whatsapp வங்கி வசதியை வழங்கி வருகின்றன. இதன் மூலமாக தாங்கள் பணம் அனுப்ப நினைக்கும் நபருக்கு வாட்ஸ் அப் மூலமாகவே பணத்தை அனுப்பிவிடலாம். இதனை எப்படி ஆரம்பிப்பது என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.

எஸ் பி ஐ

இதனை ஆக்டிவேட் செய்ய வங்கியில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து 917208933 148 என்ற எண்ணிற்கு WAREG A/C நம்பரை டைப் செய்து வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

ஆக்சிஸ் வங்கி

703616 5000 என்ற எண்ணெய் முதலில் மொபைல் போனில் சேமித்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு சேமித்த எண்ணுக்கு ஹாய் என்ற மெசேஜை வாட்ஸ் அப்பில் இருந்து அனுப்ப வேண்டும். இதன் மூலமாக கணக்குகள், காசோலைகள், கிரெடிட் கார்டுகள், டெபாசிட்கள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.

ஐ சி ஐ சி ஐ

தங்களுடைய கைபேசியில் இருந்து 8640086400 என்ற எண்ணை சேமித்து வங்கியில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அந்த எண்ணிற்கு ஹாய் என்ற மெசேஜை வாட்ஸ் அப்பில் இருந்து அனுப்ப வேண்டும். அதேபோல ஓபிடிஐஎன் என்று டைப் செய்து 9542000030 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியின் மூலமாக அனுப்பலாம்.

ஹச் டி எஃப் சி

வாடிக்கையாளர்கள் 2×7 தடையில்லா ட்ரான்ஸ்செக்ஷனை செய்து கொள்ள முடியும். வங்கியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 70702 2222 என்ற எண்ணுக்கு ஹாய் என்று வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.