பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!!

0
183
#image_title

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!!

பல்லி , குளவி, தேனீ மற்றும் நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்யலாம் என்பதற்கான மருத்துவ குறிப்புகள். பல்லி கடித்து விட்டால் அவுரி இலை மற்றும் அதனுடைய வேர் இரண்டும் சேர்த்து 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும். அந்த தண்ணீர் 100 மிலி வரும் வரை சுண்ட காய்ச்சவும். பிறகு தினமும் 25மிலி வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால் பல்லி கடித்த விஷம் குறையும்.

சில சமயங்களில் என்ன கடித்தது என்பதை நமக்கு தெரியாது. அது போன்ற நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் மக்காச்சோள மாவு மற்றும் சமையல் சோடா ஆகிய இரண்டையும் கலந்து பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விஷம் இறங்கும்.

அடுத்து அரணை கடித்தாலோ அல்லது நக்கினாலோ சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து, கடித்த இடத்தில் தடவினால் விஷம் குறையும்.

தேனீ மற்றும் குளவி கொட்டினால் மா இழையில் இருந்து வரும் பாலை கடிவாயில் தடவும் போது விஷம் இறங்கி விடும். அதன் வீக்கம் குறைய சுண்ணாம்பை தடவலாம்.

தேள் கடித்து விட்டால் 20 மிளகு சிறிதளவு தேங்காய் இரண்டையும் நன்கு மென்று சாப்பிட வேண்டும் இதனால் தேள் கடி விஷம் குறையும். வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் தடவலாம். அல்லது புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவலாம். தேன் மற்றும் எழுமிச்சை சாறு இரண்டையும் குழைத்து தடவினாலும் விஷம் இறங்கும்.

கம்பளி பூச்சியின் ரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவினால் அதனால் ஏற்பட்ட வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை அரைத்து பற்று போடலாம். வெற்றிலை சாறு எடுத்து அழுத்தி தேய்க்கலாம்.

பூரான் கடித்து விட்டால் வெற்றிலை சாற்றில் மிளகை  நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதை காயவைத்து சாப்பிட்டு வர வேண்டும். துளசி இலைகளை காய வைத்து அதை பொடி செய்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட பூரான் கடி விஷம் குறையும்.

மேலும் விஷக்கடியின் வலி குறைய கரிசலாங்கண்ணி இலையை, ஆட்டுப் பாலில் அரைத்து சாப்பிட்டால் விஷக்கடி வலி குறையும். அதேபோல் விஷ பூச்சிகள் எது கடித்தாலும் உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பு தடவி, 8 மிளகை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும்.

அடுத்தாக நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் கடித்து விட்டால் உடனடியாக வெங்காயம் மற்றும் உப்பு இரண்டையும் அரைத்து கடிப்பட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும்.

சாதாரண பாம்பு கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு தடவி 8 மிளகை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். அதுவே விஷ பாம்புகள் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று மருத்துவரின் ஆலோசனை படி நடக்க வேண்டும்.

author avatar
CineDesk