என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!!

0
213
#image_title

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் வட்டாட்சியர் என்று கூட பாராமல் விசிக மாவட்ட செயலாளர் மிகவும் கொச்சையாக பேசி உள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் ஐகோர்டானது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தேவையற்ற கொடி கம்பங்கள் மற்றும் சிலைகள் இருந்தால் அதனை அகற்றும் படி உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி சிலைகளுக்கு என்று ஓர் தனி பூங்கா கூட அமைப்பதாக கூறியது.

அங்கு சிலைகள் வைத்து கொள்ளலாம் என்றும் யார் வைக்கிறார்களோ அவர்களே அதனை பராமரித்துக் கொள்ளும் படியும் விதிமுறைகளை வெளியிட்டனர்.

இவ்வாறு இருக்கும் சூழலில் சின்னசேலம் பகுதியில் விசிக வின் கொடி கம்பத்தை அகற்றும்படி வட்டாட்சியர் கூறியுள்ளார். ஆனால் அதனை அகற்ற மறுத்தது மட்டுமின்றி வட்டாட்சியர் பெண்மணியிடம் மிகவும் கொச்சையாக கள்ளக்குறிச்சி விசிக மாவட்ட செயலாளர் பேசியுள்ளார்.

உனக்கு எதற்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும்.. நீ முதலில் வெளியே போ உனக்கு என்ன தகுதி உள்ளது?? உன்னை யார் முதலில் வர சொன்னது என ஆரம்பித்து, கம்பத்தின் மீது கை வைத்தால் உனது கை கால்களை வெட்டி விடுவேன் என்று கொலை மிரட்டலையும் விடுத்துள்ளார்.என்ன விளையாட்டு … பண்ணிட்டு இருக்கீங்களா

என கொச்சையாகவும் பேசினார்.எங்கே போய் சொல்வியோ சொல்லு, நீ இந்த தகுதிக்கு அன் பிட் இவ்வாறு அவர் வட்டாட்சியரை தரை குறைவாக பேசிய வீடியோவானது வைரலாகி வருகிறது.

அதோடு விட்டு விடாமல் திமுக மற்றும் காங்கிரஸ்காரன் என அனைவரும் கம்பம் வைக்கிறான், எங்களை மட்டும் ஏன் எடுக்க சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டும் இன்றி இவர் அவதூறாக பேசுவதை கேட்டு அங்கிருந்து போலீசாரும் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தனர்.

இதிலிருந்து தெரிகிறது திமுகவின் திராவிட மாடல் பெண்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பை கொடுக்கிறது என்று, அதிகாரிக்கே இங்கு அவருக்கு உண்டான பாதுகாப்பும் மரியாதையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக இந்த பதிவு காட்டுகிறது.

மேலும் திருமாவளவன் இது குறித்து எந்த விதத்தில் நடவடிக்கை எடுக்க போகிறார் என்றும் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.