அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!

0
61

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நூத்தி முப்பத்தி எட்டு புள்ளி என்பது வழியாக இருக்கின்ற சூழ்நிலையில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உள்ளிட்டிருக்கும அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்த பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,

தன்னுடைய சொந்த ஊருக்கு அருகில் இருக்கக்கூடிய முல்லை பெரியாறு அணையை பன்னீர்செல்வம் ஒருநாள்கூட வந்து பார்வையிட்டு போராட்டம் நடத்தினார்களா? கடந்த 10 வருடகாலமாக அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது கிடையாது பெரியாறு அணை தொடர்பாக பேசுவதற்கு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என தெரிவித்து இருக்கிறார். 80 வயதிலும் நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.

30 வருடம் சராசரி கணக்கீட்டின் அடிப்படையில் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரையில் நீரைத் தேக்கலாம் என அவர் தெரிவித்திருக்கிறார்.