அண்ணாமலையால் வெறுத்துப்போன ஸ்டாலின்!

0
75

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொள்ளாச்சியில் ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றிய சமயத்தில், இந்தியாவை வளர்ச்சியின் பக்கம் அழைத்து செல்வதற்கு பாஜக முயற்சி செய்து வருகின்றது என்று தெரிவித்தார். அதோடு அதன் வெளிப்பாடாகவே நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களுக்கும் மின்சார வசதியை கொண்டு போய் சேருகிறது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் நின்று தேர்தலை சந்திக்கிறது. எங்களுடைய கூட்டணி இந்த தேர்வில் 100% வெற்றி பெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல எதிர்கட்சியான திமுக தலைமைக்கு அவர் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கின்ற சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தான் அவர் பிரசாந்த் கிஷோர் அவர்களை வைத்து தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார் அண்ணாமலை. எங்களுடைய கட்சியை விமர்சனம் செய்யும் ஸ்டாலின் அவர்களுக்கு திமுகவிற்கு ஒரு சிறுபான்மையின தொண்டரை தலைவராக நியமித்து காட்ட இயலுமா என்று சவால் விடுத்து இருக்கிறார்.

அந்த கட்சியின் சார்பாக பொதுமக்களின் குறைகளை கேட்கிறோம் என்று செல்போன் மூலமாக சுமார் ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்டதே அதற்கான தீர்வுகள் போன்றவை என்ன ஆனது என்பது தொடர்பான விபரங்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் அண்ணாமலை.

விவகாரம் இப்படி இருக்க ஸ்டாலின் இதுவரை செய்து வந்த பிரச்சாரங்களும், வாங்கிய மனுக்களும் பிரசாந்த் கிஷோர் அவர்களின் ஆலோசனைப்படி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது போன்ற ஒரு சில பிரச்சாரங்கள் மூலமாக தமிழ் நாட்டில் ஆளும் கட்சிக்கு இருக்கக்கூடிய சில எதிர்ப்புகளை பெரிதாக காட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் காண்பதற்காக திமுக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.