கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது:? மனம் குமுறிய ப.சிதம்பரம்!

0
82


அண்மையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.அப்பொழுது
சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார்.அவர் தனக்கு இந்தி தெரியாது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்மாறு கூறியுள்ளார் அப்போது அந்த அதிகாரி பதிலுக்கு நீங்கள்
இந்தியர்தானே என்று கேட்டு கனிமொழியை அவமானப் படுத்தி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்கள்,கனிமொழி அவர்களுக்கு ஏற்பட்ட அதே கசப்பான அனுபவம் என்னை உட்பட பலருக்கும் நடந்துள்ளது.இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டுமே அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் இதுபோன்று நடந்து கொள்வது நாம் மிகவும் வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.என்று அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு தனது கசப்பான அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு பணி என்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேவைக்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமெஎன்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
Pavithra