தினைப் பொருள் ஊக்குவிப்பு!! கூட்டத்தொடரில் எம்பிகளுக்கு மோடி கட்டளை!

0
127

தினைப் பொருள் ஊக்குவிப்பு!! கூட்டத்தொடரில் எம்பிகளுக்கு மோடி கட்டளை!

தினை பொருட்கள் குறித்து பாஜக எம்பிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என இன்று நடந்த கூட்டத்தொடரில் எம்பி களுக்கு மோடி அறிவுறுத்தல்.

கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்றத்தில் வரும் நாட்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது இந்த கூட்டதொடரில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், முரளிதரன்,பிரகலாத் ஜோஷி , பாஜக தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், பாஜக mpகள் நடத்தும் கூட்டங்களில் திணை பொருட்கள் குறித்து பேச வேண்டும் என்றும்,
தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் பிரகலாத் ஜோஷி! செய்தியாளர்களிடம் அவர் கூறியதவாறு:

ஐநாவுக்கு இந்திய அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச திணை ஆண்டாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திணை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறித்து,பாஜக எம்பிகள் நடத்தும் கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் கூறினார்.

மேலும் தினை உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஜி 20 விருந்தினர்களுக்கு திணை வகைகளால் ஆன உணவுகளை வழங்கலாம் என பிரதமர் அறிவுறுத்தியினார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

2023 ஆம் ஆண்டு சர்வதேச தினம் ஆண்டாக கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தினையிலான 18 வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

author avatar
Pavithra