தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

0
80

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தனது 17வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் 2002-ம் அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். இவர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் மற்றும் விக்கெட் கீப்பரும் ஆவார். தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் பார்த்தீவ் படேல். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இவர் தோனி மற்றும் ரோஹித்தின் தலைமைத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். அதன் பிறகு, மும்பை அணியில் இடம்பிடித்து, மும்பை அணிக்காகவும் விளையாடி வந்தார். இந்த நிலையில், தோனி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் அணியை வழிநடத்தும் விதம் குறித்து அவர் கூறுகையில்,

நான் ஐபிஎல்-லில் சென்னை மற்றும் மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறேன். எனவே தோனி மற்றும் ரோஹித் ஆகிய இருவரின் தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம் எனக்கு இருக்கிறது. அந்த வகையில், அணியில் ஒரு வீரருக்கு ஆதரவு வாய்ப்பு கிடைத்தால், அவரால் சிறப்பாக செயல்பட முடியும். இந்த பண்பு தோனியிடம் உள்ளது.

அவர் உடன் இருக்கும் சக வீரர்களுக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வந்தார். இதனையே ரோஹித்தும் செய்து வருகிறார். அணியின் வீரர்களுக்கு பாதுகாப்பையும், தெளிவையும் அளித்து அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம் அணியை வழிநடத்தும் தலைமையின் விதம்தான். இந்த குணங்கள் ரோஹித்திடம் உள்ளது. இவ்வாறு பார்த்தீவ் பட்டேல், அணியில் இருவரின் தலைமைத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார்.

author avatar
Parthipan K