பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

0
189

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ் செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும்.

கை,கால்கள் மட்டுமின்றி உடல் உறுப்புகளின் மேல் சிறு சிறு கொப்பளங்களாக வரும். சிறு தூசியோ அல்லது துணிகளோ பட்டாலோ மிக மோசமான வலியை ஏற்படுத்தும்.அக்கி வந்த பிறகு நாம் இதை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.கஞ்சி,இளநீர்,குளிர்ச்சியான உணவுகள்,பால், நீர்மோர்

கரும்புச்சாறு,ஆப்பிள்,ஆரஞ்சு, திராட்சை,சத்துமாவு ஆகியவை நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் ஆகும். அக்கி வந்த பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் சிலது உள்ளது அதை பின்வருமாறு,இறைச்சி,காரம்

அதிக உப்பு ஆகியவை நாம் தவிர்த்து வர வேண்டும்.அக்கி சின்னம்மை,ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ், இவ்விரண்டு வகைகளும் வலியை உண்டாக்கும். மருத்துவரிடம் ஆலோசித்து முறையான சிகிச்சை பெறவேண்டும்.அக்கி வந்தால் சில பாதிப்புகளை உண்டாகும்.

கட்டி உடைந்து புண் ஆனாலும் தழும்புகள் எதுவும் ஏற்படாது ஆறிவிடும். சொறிந்தாலோ கீறினாலோ தொற்றாகி தழும்புகள் ஏற்படும்.சவ்வுப்படலம் சருமத்தில் சேரும் இடத்தில் இது வர வாய்ப்புள்ளது. வாய் மூக்குப் பகுதிகளில் சிலருக்கு அதிக பாதிப்புத் தெரியும். அந்தரங்கப்பகுதியிலும் வரலாம். சருமத்தில் வரலாம். உடலில் வயிற்றில் நெஞ்சில் வரலாம்.

கிருமி நரம்பில் தங்கிஇ சருமத்தில் அந்த நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். கண்களைக் கூட பாதிக்கலாம். எனவே மேற்கூறியபடி முறையான சிகிச்சை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

author avatar
Parthipan K