வீட்டருகே பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்!

0
235
What can be done to prevent snakes from entering the house? What to do first if a snake bites? Learn!
What can be done to prevent snakes from entering the house? What to do first if a snake bites? Learn!

வீட்டருகே பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்!

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த அளவுக்கு பாம்பு எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு ஊர்வன. அழகுக்காக வீட்டின் முன் வளர்க்கப்படும், புற்கள், பூச்செடிகளுக்குள் பாம்புகள் இலகுவில் தஞ்சம் அடைகின்றன. ஆனால் இந்த இடங்களில் ஈரப்பதம் இல்லாத சமயங்களில் ஈரப்பதத்தை நோக்கி பயணிக்கும் போது மனிதர்களிடம் பாம்பு சிக்கிக் கொள்கிறது. அல்லது மனிதன் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகின்றான்.
பாம்புகளுக்கு பொதுவாக அதிர்வுகளை உணரும் திறன் இருப்பதால் மறைந்தே அது வாழும் இயல்பு கொண்டது.ஒரு வேளை மறைந்துக் கொள்வதற்கு இடமில்லாத போது தன்னை மனிதர்கள் தாக்க வருவதைப் போல் அது உணர்ந்தால் தனது பாதுகாப்புக் கருதி தீண்டிவிடும்.

சமூக ஆர்வலர் :-

தேனி மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் செய்து வரும் நபர்கள் பெரும்பாலும் மலை அடிவாரப் பகுதிகளிலும் தங்கள் தோட்டம் அமைந்துள்ள பகுதிகளிலும் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் வசித்துவரும் பொதுமக்கள் பாம்பு தொல்லையால் அவ்வப்போது அவதிப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைவதால் பாம்பை கண்டு பயந்து அஞ்சுகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் நுழையும் பாம்புகளை துன்புறுத்தாமல் அவற்றை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை செய்து வருகின்றனர் பாம்பு ஆர்வலர்களான முத்துகிருஷ்ணன் மற்றும் மணிகண்டன் பிரபு.

பாம்புகள் மீது ஆர்வம் :

தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துகிருஷ்ணன் மற்றும் மணிகண்டன் பிரபு. முத்துக்கிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சிறு வயதிலிருந்தே பாம்புகள் மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. தனது 10 வயதில் பாம்புகளை பிடிக்க ஆரம்பித்த இவர் தற்போது வரை மாவட்டம் முழுவதிலும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் சேவை :-

இதுகுறித்து பாம்பு ஆர்வலரான முத்துகிருஷ்ணன் கூறுகையில் “சிறுவயதில் இருந்து பாம்புகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆற்றுப் பகுதியில் நண்டுகளை பிடிக்கும் போது, தண்ணி பாம்புகளை பிடிக்க பழகினோம். பின்னர் நாள் போக்கில் அனைத்து வகையான பாம்புகளையும் பிடிக்க கற்றுக் கொண்டோம். வீட்டிற்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறோம். குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைந்தால் பொதுமக்கள் அச்சத்துடன் பாம்புகளை அடித்து கொன்று விடுகின்றனர். பாம்புகள் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினம் ஆகும். அதனை மக்கள் துன்புறுத்துவதை என்னால் பார்க்க முடியவில்லை. பொதுமக்களிடம் இருந்து பாம்புகளை காக்க வேண்டும் என்ற நோக்கில் சேவை மனதோடு பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை செய்து வருகிறோம்.

மேலும் பாம்புகள் யார் வீட்டிலோ, வேறு எங்கு வந்தாலும் அதனை அடிக்காமல், என்னை போன்றோரை அல்லது தீயனைப்பு அதிகாரிகளை அழைத்து பாம்புகளை அப்புறப் படுத்துங்கள் என்பது எனது வேண்டுகோள். மேலும் நான் பாம்பு பிடிப்பதற்கான பணம் வாங்குவதில்லை. முழுக்க முழுக்க சேவையாகவே செய்கிறேன்”, என்கிறார் முத்துகிருஷ்ணன் .

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கவனித்திற்கு..
தங்கள் வீட்டின் அருகே பாம்புகள்  வந்தால் கோம்பையை சேர்ந்த முத்துகிருஷ்ணனை 9344548077 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்..