நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்!

0
69
What a pity for the passenger in the middle! The action taken by the Union Minister!
What a pity for the passenger in the middle! The action taken by the Union Minister!

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்!

டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்டிகோ விமானம் சென்று கொண்டு இருந்தது. அதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் பயணம் மேற்கொண்டார். மேலும் அவர்  திடீரென மயக்கமடைந்த சாதாரண விமான பயணிக்கு முதலுதவி சிகிச்சையும்  அளித்துள்ளார். இந்த மத்திய மந்திரி குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

அவர் மும்பையில் உள்ள கெ.இ.எம் மருத்துவமனையில் மருத்துவம் படித்தவர். நேற்று அவர் டெல்லியில் இருந்து மும்பைக்கு அதிகாலை நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து  கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணி அளவில் விமானத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ உதவி தேவை என அறிவிக்கப் பட்டது. இந்த நிலையில் விமானப் பணிப்பெண்ணிடம் அந்த பிரச்சினை பற்றி விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அந்த இடத்திற்கு வந்தார். அப்போது 45 வயதான அந்த பயணி மயக்க நிலையில் இருந்தார். அவரை பரிசோதித்த பகவத் காரத் பாதிக்கப்பட்ட நபரின் சட்டையை கழற்றி அவரது மார்பில் சிறிது மசாஜ் செய்து விட்டார். மேலும் அவரது இதயத்திற்கு ரத்தம் பாயும் வகையில் கால்களை சற்று உயர்த்தி தலையணையில் வைத்தார்.

அதன் காரணமாக விரைவில் அந்த நபர் சுயநினைவை அடைந்தார். அதன் பின்னர் அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. மேலும் அந்த நபருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் மந்திரி தெரிவித்தார். இவர் ஒரு மந்திரியாக இருந்தாலும் மருத்துவர் என்பதால் சேவை மனப்பான்மையோடு இந்த செயலை செய்துள்ளார்.

இந்த செயல் சக பயணிகளிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி அவர் இதயத்தில் எப்போதும் மருத்துவர் என அவரை புகழ்ந்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவினை பதிவிட்டு உள்ளார்.