கூகுள் பே நிறுவனம் குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :! கூகுள் பே நிறுவனம் இன்று விளக்கம் !!

0
69

கூகுள் பே (Google pay) செயலி பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் தகவல்களை, மூன்றாவது நண்பர்கள் பகிர்வதாக குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் இன்று விளக்கமளித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கூகுள் பிளே நிறுவனம் மீது மத்திய அரசு, வணிக சட்டத்துக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், பண பரிமாற்றத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்றும், பயனாளர்களின் தகவல்களை மூன்றாவது நபர்களுக்கு பகிர்வதாதுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்தப் புகாருக்கு பதிலளிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் இன்று பிரமாண பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், பயனாளர்களின் தகவல்களை என்பிசிஐ( National payment corporation of India) மற்றும் பண பரிமாற்றத்தில் ஈடுபடும் பிஎஸ்பி வங்கிகளில் முன் அனுமதியுடன் மட்டுமே பண பரிமாற்றங்கள் விவரங்களை மூன்றாம் தரப்பினருக்கு பகிரப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளது.

மேலும், எம்பிசியை வெளியிட்டிருக்கும் யூபிஐ வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தியே கூகுள் நிறுவனம் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கமளித்தது. அதேவேலையில் சட்டத்தைப் பின்பற்றியே கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும் பணப் பரிமாற்றத்தின் பொழுது பயனாளர்களின் தகவல்களை மூன்றாவது நண்பர்களுக்கு பகிர்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணைகளை, வரும் நவம்பர் மாதம் 10 -ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

author avatar
Parthipan K