மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்!

0
57
Welcome to Central! Awesome Chief!
Welcome to Central! Awesome Chief!

மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்!

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி சென்றார்.டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் சர்ச்சைகளை சுட்டிக்காட்டி மனு ஒன்று கொடுத்து வந்தார்.பலமுறை பிரதமரிடம் இச்-சர்ச்சைகள் பற்றி கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முதல்வர் குடியரசு தலைவரிடம் முறையிட சென்றார்.அவ்வாறு சென்ற போது சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு குடியரசு தலைவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அழைத்தார்.

அவர் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழ்நாட்டில் 5 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.அதன்படி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை புரிந்தார்.இவரை வரவேற்க விமான நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.குடியரசு தலைவர் விமானத்தை விட்டு இறங்கியதும் மலர் கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

அதனையடுத்து இன்று அவர் மாலை 5 மணி அளவில் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.விழாவை முடித்த பிறகு கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார்.அந்த ஆளுநர் மாளிகையில் காவல் துறையினர் மற்றும் கமாண்டோ வீரர்கள் கூடிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாளை காலை தனி விமானம் மூலம் உதகை செல்ல உள்ளார்.அங்குள்ள ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.அதனையடுத்து வேலூர் கோட்டையில் உள்ள சுற்றுலா தளங்களையும் பார்வையிட உள்ளார்.இவை அனைத்தும் முடித்த பிறகு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளார்.