புயலுக்கு வாய்ப்பில்லை! ஆனால் இன்று முதல் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
91

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உதவித்த இடங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் கனமழையும் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸில் இருந்து, 31 இடங்கள் செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸில் இருந்து, 25 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29ல் இருந்து 30 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸில் இருந்து 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்பு உண்டு. மேலே குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.