புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றம்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மழை எச்சரிக்கை விவரம் இதுதான்!

0
140

பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழகம் இந்த பருவமழையின் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் இந்த பருவமழை காரணமாக அதீத சேதங்களை சந்தித்திருக்கிறது.

அந்த மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேதங்கள் அதிகரித்தனர். ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அந்த பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மேலும் அங்கு மெல்ல, மெல்ல நிலைமை சீரடைந்து வருகிறது.

மேலும் அவ்வப்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு மழை தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று 5ந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதால் கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட துரைமுருகன் முகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா, புதுவை உள்ளிட்ட கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்ற காரணத்தால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 510 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். அதோடு 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் இன்று தென் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.. நாளை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.