பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

0
103
#image_title
பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திற்கு அருகே பேனா நினைவுச் சின்னம் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக கட்சி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு பின்பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக கடல் மேல் நடந்து சென்று இந்த பேனா நினைவுச் சின்னத்தை பார்க்கும் விதமாக கட்டப்படவுள்ளது. இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கு மத்தியில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல்  செய்யப்பட்டது. அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.  கடல் வளத்தை பாதுக்கவும் கடல் அரிப்பை தடுக்கவும் மரக்கன்றுகள் நடவும் உத்தரவிட வேண்டும். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை கே.கே ரமேஷ் அளித்த மனுத்தாக்கல் விரைவில் விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மீனவர்கள் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.