நாங்கள் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்தோமா? எல்.முருகன் விளக்கம்!

0
90

பாஜக அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தான் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலே, மதுரையிலே செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பாஜக தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என தெரிவித்திருக்கிற முருகன் ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என முடிவெடுத்துவிட்டார் ஆனாலும் அவர் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால், அதை வரவேற்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜக தரப்பில் 100 இடங்களை கேட்டதாகவும், இதன் காரணமாக அதிமுக அதிர்ச்சியில் இருப்பதாகவும், தொடர்ச்சியான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலே பிரதான கட்சியான அதிமுக தமிழகத்தில் இதுவரை பிரதான கட்சியாக இல்லாத கட்சிக்கு இத்தனை இடங்கள் ஒதுக்குவதில் அதிமுகவின் தலைமை ஏற்றுக்கொண்டாலும், அதனை நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், அதன் காரணமாகவே இரண்டு தரப்பிலும் இன்னமும் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலே, இந்த விஷயத்தில் உண்மை கிடையாது என்று முருகன் இன்றையதினம் விளக்கம் அளித்திருக்கிறார். ரஜினிகாந்த் கட்சி தொடங்காத நிலையில், அவரை எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லி கேட்டதாகவும் , பேச்சு இருந்து வந்தது என்றும், ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று முடிவெடுத்து இருக்கின்றார் ஆனாலும் ,அவர் வரும் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்தால் அதனை வரவேற்கும் எனவும், தெரிவித்திருக்கிறார்.