இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

0
91

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த 10-ந் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர்.

கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை குறைக்க அம்மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டது. இதனிடையே, கர்நாடக உயர்நீதிமன்றம் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு தடை விதித்து இடைக்கால தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில், அங்கு நிலவி வந்த பதற்றமான சூழல் குறைந்த நிலையில், கடந்த 14-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று கர்நாடகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அனைத்து கல்லூரிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பல முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளுக்கு ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து வந்துள்ளனர். அவர்களை கல்லூரி முதல்வர்கள் தடுத்து நிறுத்தி ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர அனுமதி கிடையாது என கூறி விட்டனர். இதனால், முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவிகள்,

மழலையர் பள்ளியில் சேர்ந்து படித்தது முதல் ஹிஜாப் அணிந்து வருகிறோம். இதுவரை எந்த தடையும் இல்லை. கடந்த இரண்டு வாரமாகத்தான் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கல்விக்கு இணையாக ஹிஜாப்பை மதிக்கிறோம். தற்போது கல்வியா? ஹிஜாப்பா? என்றால், ஹிஜாப்தான் முக்கியம் என்றனர். மேலும் ஹிஜாப் ஒரு புனித ஆடை. புனிதத்தை காக்க கல்வியை துறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினர்.

author avatar
Parthipan K