காலையிலேயே காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு! முதலமைச்சரின் அதிரடி முடிவு!

0
67

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு குற்றவாளிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினருக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதேபோல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருக்கக்கூடிய ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எப்போதுமே திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் அதிகமாகப் பெருகிவிடும் என்பது தமிழக மக்களின் கருத்தாக இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அந்த தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குற்ற பின்னணியில் சிக்கி இருக்கக்கூடிய 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல காவல்துறை உயர் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தும் உத்தரவுகள் பறந்து வருகின்றன. இதற்கு இடையில் தமிழ்நாட்டில் ஐந்து ஏடிஜிபிகளை டிஜிபியாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் இன்றைய தினம் வெளியிட்டிருக்கின்றார். அதில் கடந்த 1990 ஆம் வருட பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளாக தமிழ்நாட்டில் பணிபுரியும் ஏடிஜிபி அந்தஸ்தில் இருக்கின்ற 5 அதிகாரிகளை டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதனடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய கழகத்தின் தலைவராகவும், கூடுதல் டிஜிபியாக இருக்கின்ற ஏ கே விஸ்வநாதன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியாக இருக்கக்கூடிய சீமா அகர்வால் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் டிஜிபியாக பணியில் இருக்கின்ற ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து ஏடிஜிபிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் முன்னரே சட்டம் ஒழுங்கு டிஜிபியாக 7 டிஜிபியாக இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், தற்சமயம் 5 ஏடிஜிபி கல் டிஜிபிகளாக பதவி உயர்வு பெற்று இருப்பதன் மூலமாக தமிழ்நாட்டில் டிஜிபிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி டெல்லியில் டிஜிபி அந்தஸ்து உயர்வு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் காவல் உயர் அதிகாரிகளின் முக்கிய பணியிடங்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரலாம் என்று சொல்லப்படுகிறது