மூன்று வாரங்களில் குறைந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம்! காவிரி டெல்டா விவசாயிகள் கவலை

0
71

மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று வாரங்களில் 13.52 அடி குறைந்துள்ளது.இதனால் காவிரி மற்றும் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வருடம் தோறும் டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 வரை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.இந்த மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி,டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.73 அடியாக இருந்ததால் குருவை சாகுபடிக்காக அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி நீர் திறந்து விடப்பட்டது.தொடக்கத்தில் வினாடிக்கு 2,000 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரித்தது.ஜூன் 1 ஆம் தேதியில் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக உயர்ந்தது.

எனவே அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து,பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நாளொன்றுக்கு 1.10 அடி வீதம் குறைந்து வருகிறது.

கடந்த மாதம் 12 ஆம் தேதியில் 101.73 அடியாக இருந்த நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 88.21 அடியாக குறைந்தது.வேகமாக அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் காவிரி மற்றும் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பருவ மழை பெய்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்கு நீர் தடையின்றி கிடைக்கும்.

author avatar
Parthipan K