ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

0

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

ரஜினிகாந்தை எம் ஜி ஆர் தனது ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாக சொல்லப்படும் செய்தியை எம்ஜிஆரின் பாதுகாவலர் கே பி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

ரஜினிகாந்த் 1980 களில் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் வாய்வழிச் செய்தியாகவும் கிசுகிசுக்களாகவும் பல ஆண்டுகளாக ஒரு தகவல் உலாவந்து கொண்டு இருக்கிறது..அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இது ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கெடுப்பதாக செய்யப்படும் அவதூறு என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை எம் ஜி ஆரிடம் பாதுகாவலராக இருந்த கே பி ராமகிருஷ்ணன் என்பவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் ‘அது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. ஆனால் கோவையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒரு தொண்டரை தோட்டத்துக்கு அழைத்து எம் ஜி ஆர் அடித்தார்’ எனக் கூறி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதே போல இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட நடிகை லதாவும் ஒரு நேர்காணலில் இதை மறுத்துள்ளார். அதில் ‘பாவம் ரஜினியைப் பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போல. அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை’ என்று  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat