சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !!

0
153
Warning to Sai Baba Devotees!! A shocking incident of fraud involving crores of rupees in God's name!!
Warning to Sai Baba Devotees!! A shocking incident of fraud involving crores of rupees in God's name!!

சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !!

செய்வினை பில்லி சூனியம் எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த மந்திரவாதி அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள கே.கே நகரை சேர்ந்தவர் மோகன் நாத் வயது 54. இவர் தீவிர சாய்பாபா பக்தனாவார். மேலும் தனது வீட்டில் மாதந்தோறும் பூஜைகள் நடத்தி வந்தார் இந்த பூஜையில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொண்டனர். இவர் கேகே நகர் சாய்பாபா கோவிலில் சென்றிருந்தபோது அங்கு ராதா என்கிற சுப்புலட்சுமி வயது 43, மற்றும் சபரிநாதன் வயது 40,ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார் அவர்கள் இருவரும் தாங்கள் தீவிர சாய்பாபா பக்தர்கள் என்று கூறிக்கொண்டு மோகனின் வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது சபரிநாதன் திடீரென அருள் வாக்கு வந்தவர் போல் சாமியாடியுள்ளார். மேலும் மோகனின் உறவினர்கள் அவருக்கு செய்வினை வைத்துள்ளதாகவும் அது அவருக்கு ஏராளமான தீமைகளை தரும் என்றும் வாக்கு கூறி உள்ளார். அதனை நம்பிய மோகனும்  செய்வினை கோளாறு தீர்க்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சபரிநாதன் மாந்திரீக பூஜை செய்தால் செய்வினை கோளாறுகள் அனைத்தும் நீங்கிவிடும் சுபிட்சமாக வாழலாம் என்று கூறியுள்ளார். அதை நம்பிய மோகன்  பூஜை செய்வதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். சபரிநாதன் பூஜைக்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் பூஜையில் வைக்க தங்க நகைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்கு மோகன் தனது வீட்டில் இருந்த 15 பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.

மேலும் மேலும் பூஜை பரிகாரம் என்று கூறி மோகனிடம் 3 லட்சம் ரூபாய் வரை சபரிநாதன் கறந்துள்ளார். மேலும் கேகே நகரில்  தான்  வசிப்பதாகவும் ராதா தனது சீடர் எனவும் சபரிநாதன் கூறியுள்ளார். அதற்கு அடுத்ததாக தனது வீட்டில் நடக்கும் பூஜையில்  வைத்துவிட்டு தருகிறேன் எனக்கூறி   15 பவுன் நகைகளையும் எடுத்துச் செல்ல, மோகன் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள் மோகன் கேகே நகர் வீடு சென்று பார்த்த பொழுது சபரிநாதனின் வீடு பூட்டி கிடந்தது. ராதா மற்றும் சபரிநாதன் இருவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் மேலும் விசாரிக்கவே அவர்கள் இருவரும் 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. மேலும் தீவிர விசாரிக்கவே சபரிநாதன் ஒரு போலி சாமியார் என்பதும் புதுச்சேரியில் அவர் நிறைய பேரிடம் சாய்பாபா பக்தர் என கூறிக்கொண்டு கோடிக்கணக்கில்  ஏமாற்றியதும் தெரிய வந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன் கேகே நகர் போலீசில் புகார் அளிக்கவே கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷ்னர்,சங்கர்ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். மேலும் போலிசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மோசடி பேர்வழி சபரிநாதன், அவனது தோழி ராதாவும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை மற்றும் ரூ.60000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இவர்கள் இருவரும் வெவ்வேறு மோசடி வழக்கில் சிக்கி புதுச்சேரி சிறையில் இருந்தபோது சந்தித்து பழகியுள்ளனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்து சென்னை கேகே நகரி தங்கி மோகனை மோசடியில் சிக்க வைத்து ஏமாற்றி உள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.