சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்!

0
94
Warning to residents of Chennai! Shocking information about the solar eclipse!
Warning to residents of Chennai! Shocking information about the solar eclipse!

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்!

தீபாவளி பண்டிகை அடுத்த நாள் சூரிய கிரகணம் வரவுள்ளது. இதனை வெறும் கண்களால் பொதுமக்கள் பார்க்க கூடாது என எச்சரித்துள்ளனர். இரண்டு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த வருட தீபாவளி பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளி அடுத்த நாளே சூரிய கிரகணம் எனக் கூறியுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் கூறியுள்ளது. வடகிழக்கு இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய தீவுகளில் இந்த கிரகணத்தை தெளிவாக பார்க்க இயலும்.

மாலை நேரத்தில் சூரியன் மறையும் நேரத்தில் இந்த கிரகணத்தை பார்க்க இயலாது என தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமேற்கு பகுதிகளில் சந்திரன், சூரியனை மறைக்கும் நிகழ்வு 40 முதல் 50 சதவீதம் வரை காணப்படும். அச்சமயத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா மாநிலத்தில் இந்த கிரகணம் ஆரம்பமாகும் நேரம் முதல் முடியும் நேரமாக 12 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காணப்படும். அவ்வாறு காணப்படும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க கூடாது என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.